நீங்கள் தேடும் உறவின் பெயர் பட்டியலில் இல்லை என்றால், தயவுசெய்து இங்கே தொடர்பு கொள்ளவும். உடனடியாக தெரிந்துகொள்ள வேண்டிய சந்தர்பம் என்றால், எங்களுக்கு இ-மெயில் அனுப்பவும்.

==========================

பொதுவான குறிப்புகள்

1. பக்ஷிணி (1.5 நாள் தீட்டு) என்பதன் விளக்கம்:
பக்ஷிணி (1.5 நாள்) என்பது 90 நாழிகை (அதாவது 36 மணி) காலம். இது இரண்டு இரவும் ஒரு பகலும் சேர்ந்த காலம் (அ) இரண்டு பகலும் ஒரு இரவும் சேர்ந்த காலம். தீட்டு கழியும் நாளில் பகலில் போஜனம் செய்யாமல் இருந்தால் மட்டுமே தீட்டு கழியும். (போஜனம் செய்தால் மறுநாள் உதயம் வரை தீட்டு உண்டு)
2. முதல் நாள் பகலில் மரணம் ஏற்பட்டு மறுநாள் பகலில் ஒருவன் சாப்பிட்ட பிறகு இந்த விஷயம் தெரிய வந்தால், மிகுந்த காலத்தில் சாப்பிடாமல் இருந்து அஸ்தமனம் ஸன பிறகு ஸ்நானம் செய்தால் தீட்டு போய்விடும்.
3. பொதுவாக 1.5 நாள் தீட்டு யாருக்கு யார் (புருஷன் அல்லது ஸ்த்ரீ) மரணத்தால் ஏற்பட்டதோ அது அவர்களுடன் முடிந்து போகும். அந்த புருஷன் (அ) ஸ்த்ரீயின் மனைவி (அ) கணவன் இறந்தால் ஸ்நானம் மட்டுமே.
4. உதாரணமாக அத்தை பெண் இறந்தால் அம்மான் சேய்க்கு 1.5 நாள் மட்டும் ஆனால் அத்தை பெண்ணின் கணவன் இறந்தால் அம்மான் சேய்க்கு ஸ்நானம் மட்டுமே. இது புருஷர்கள் விஷயம்
5. பர்த்தாவுக்கு எந்தெந்த தீட்டுகள் உண்டோ அவை அப்படியே மனைவிக்கும் உண்டு.
6. ஸ்த்ரீக்கான தீட்டு இங்கு குறிப்பிடப்படவில்லை என்றால், தங்களின் பர்த்தாவுக்கான தீட்டுக் குறிப்பைப் பார்க்கவும்